Wednesday, March 10, 2010

மறக்க முடியாத ரெயில் பயணம்

மறக்கமுடியாத ரெயில் பயணம்

அன்று (7-12-2009 ) நான் சென்னையில் இருந்து திருசெந்தூர் சென்றேன்.... என்ன துணைக்கு என் சித்தப்பா வந்தார்.... நா ஒன்றும் சின்ன பிள்ளை இல்ல துணைக்கு ஆல் கூட்டிகிட்டு செல்லும் அளவுக்கு.... அன்று கூட நா சித்தப்பா வர வேண்டாம் என்றுதான் சொன்னேன் அவர்கள் என்னை தனியாக அனுப்புவதாக இல்லை...... ஏன் என்ன சித்தப்பா கூட வந்தார்கள் தெரியுமா அதற்கு நான் ஒரு வரம் முன் போய் உங்களக்கு சொல்ல விரும்பிகிறேன்.... எனக்கு கடந்த ஒரு வாரமாக தலை வலி மருத்துவர்கள் சைனஸ் என்றார்கள் அதற்கு வைத்தியம் எடுத்தும் கேக்கவில்லை அது காச்சல் ஆக மாறியது.... என்னால் சரி வர இயங்க முடியவில்லை.....

நான் கலையில் என் அம்மாவை தொலைபேசியில் தொடார்பு கொண்டு என் பிரேச்சனையை கூறினேன் அவர்களை சென்னை வருமாறு அழைத்தேன், பின் என் அப்பா சென்னையில் உள்ள என் சித்தப்பாவை தொடர்பு கொண்டு என் ஊருக்கு அழைத்து வர சொன்னார்கள். நான் தனியாக சென்றுவிடுவேன் என்று கூறினேன் அதை அவர்கள்மறுத்து விட்டார்கள் .

மாலை எழு மணிக்கு ரெயில் கிளம்பியது ஒரு o மணி நேரம் கழித்து நான் வாங்கி வைத்த இட்லியை சாப்பிட்டேன் பின்பு சற்று நேரம் கழித்து நான் படுத்துகொண்டேன். எனக்கு குளிர ஆரம்பித்தது ..... நான் குளிரில் ஆட ஆரம்பிதேன் ...... குளிர் என்னை தூக்கி போட்டு அடித்தது ...... என் அருகை உட்கார்ந்து கொடிருந்தவர்கள் பயந்துவிட்டார்கள் ...அதன் பின் நான் மருந்து உட்கொண்டேன் ஆனால் அது சற்று நேரத்தில் வெளிய வந்திட்டு ... ஆமா வாந்தி எடுத்திட்டேன் ...... அதன் பின் தூங்க முயன்றேன் .....

என் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து சென்றன ..... காலையில் வீடு போய் சேர்ந்துடன் என் நண்பர்கள் அணைவருக்கும் ஒரு செய்தி அனுப்ப நினைதேன் அந்த செய்தி என்ன வென்றால் " நா எனது இறுதி மூச்சை நெருங்கி கொண்டு இருக்கிறேன் உங்களை எல்லாம் பார்க்க விரும்பிகிறேன் கண்டிப்பாக என்னை பார்க்க வரவும் " ........ அதை யோசித்து கொண்டு இருக்கும் போதே நா ரெயிலில் இறந்திட்டா என்று யோசிக்க நல்ல வேளை சித்தப்பா கூட வந்திருக்கிறார் .... சித்தப்பவுக்கு நன்றி சொல்லனும்னு தோணிச்சு ..... நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் தெருவில் இருக்கும் ஒரு நண்பன் இறந்த சம்பவம் ..... அதில் நான் கத்தி அழதது நிபாகம் வந்தது ..... அது போல என் சாவின் போதும் அது போன்று சத்தம் எழுமே என்று எண்ணினேன் ..... சற்று நேரம் கழித்து நானும் என் நண்பனும் எங்களோடைய தலைமை ஆசிரியர் இறந்த போது அவரை பார்க்க சென்ற சம்பவம் கண் முன் வந்து சென்றது ...... அப்படியா என் பள்ளி பருவத்துக்கு சென்றேன் ........ காதல் என்றால் என்ன என்று கூட தெரியாத வயசில் எனக்குள் ஏற்பட்ட அந்த உணர்வுகள் வந்து சென்றன .... அது கசப்பான அனுபவம் என்றாலும் இனிமையாகவே இருந்தது ......

ரெயில் விழுப்புரம் வந்து சேர்ந்தது...... காபி வாங்கினேன்..... மீண்டும் மருந்து உட்கொண்டேன் .... இந்த முறை வாந்தி எடுக்கவில்லை ...... சிறிது நேரம் அமர்ந்து கொண்டு இருந்தேன் ..... என் சித்தப்பா உட்பட அனைவரும் தூங்கிவிட்டார்கள் .... நானும் தூங்க முயிற்சிதேன் ஆனால் தூக்கம் வரவில்லை .... காச்சல் குறைந்து விட்டது .... ரெயில் கதவின் அருகை போய் நின்றேன் .... ரெயிலின் நடுவே அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தேன் .... அனைவரும் தூங்கி விட்டனர் ..... யாராவுது விளித்திரிக்கிரர்களா என்று பார்த்தேன் ..... பேச்சு துணைக்கு ஆள் தேடினேன் ..... யாரும் கிடைக்கவில்லை .... மீண்டும் படுக்கைக்கு சென்றுவிட்டேன் ......

இன்னும் என் மனசுக்குள் பல எண்ணங்கள் தோன்றி கொண்டுரிந்தன .... நா இறந்தால் என் அப்பா அம்மா எந்த அளவுக்கு வேதனை படுவார்கள் .... எனக்கு நன்றாக தெரியும் என் அம்மா வழி சொந்தத்தில் நான் தான் மூத்தவன் ...... என் தங்கை தம்பிகளை விட நான் தான் அவங்களுக்கு செல்ல பிள்ளை ... ஐயோ என்னால் இதுக்கு மேல யோசிக்க முடியல .... கண்ணை இருக்க மூடி கொண்ட தூங்க முயற்சிதேன் ...... முடியவில்லை ....

சற்று நேரம் களித்து நான் தூங்கி இருக்கிறேன் .... காலையில் எழுந்து டீ குடித்தேன் ..... காலையில் மீண்டும் காச்சல் ஆரம்பித்தி விட்டது ...... திருநெல்வேலி ரெயில் நிலையம் வந்து சேர்ந்தோம் .... என் அப்பாவை பார்த்ததும் கட்டிபிடித்து கண்ணீர் விட வேண்டும் என்று தோன்றியது ... ஆனால் செய்யவில்லை ...... சற்று நேரம் களித்து என் அம்மாவை பார்த்தேன் ... என் அம்மா என்னை கட்டிபிடித்து அழுதார்கள் நான் அவர்களை சமாதினபடுத்தினேன்..............................

Friday, June 12, 2009

Hi

Hi All,

I am writing my blogs at Mark's Scribblings .

Saturday, October 4, 2008

Hi Friends

Hi All,

I also want to scribble some thing that I want to share with my friends and to the public. Hope I will continue my scribbling till my last breath. There is lot to say to my friends and lot to know from my friends. Hope this will take me to a new stage and to new friends.

Regards
Anand